பிறந்தது தமிழ் மண்ணில்
தமிழை சங்கம் வைத்து வளர்த்த ஊர்
மதுரை என்றழைக்கப்பட்ட ஈரமான மனிதர்கள்
வாழும் உன்னதமான நகரம்
ஆசிரிய குடும்பத்தில் பிறந்திருந்தும்
படிப்பில் கவனமின்றி வாழ்கையை பற்றி
சிறு வயதிநிலேயே யோசிக்க பழகி
கண்ணீரும், குழபங்களுமாய் திரிந்தேன்
தந்தையின் அறிவுரையினாலும்
தாயின் அரவணைபினாலும்
நடைமுறை வாழ்கையை பற்றி படிக்க பயின்றேன்
ஆண் பிள்ளைகள் அழ கூடாது என்ற
என் தந்தையின் ஆண்கர்வமான பேச்சு
ஆழமாய் பதிந்தது என் ஈர மனதில்
காலங்கள் கடந்தன
பகிர்ந்துகொள்ள வில்லை என் இன்னல்களை
காலம் கடந்தால் எல்லாம் பழகி போகுமென்ற
நண்பனின் ஆறுதல் பேச்சு
துணையாய் இருந்தது வெகு நாட்களுக்கு
இதற்கிடையில் கண்டேன் சில சீதைகளை
விரும்பினேன் அவர்களின் நட்பினை
தமிழ் நாட்டு கலாசாரம் என் மனதை இழித்து
விட்டு விலகினேன், கலாசாரம் என்னை வெறுத்தாலும்
இதய தேவதைகள் தொடர்ந்தன
சொந்தத்தை விரும்பின
குடுப்பதற்கு நேரமும் இல்லை
ஏற்றுகொள்வதற்கு சந்தர்ப்பமும் இல்லை
எனக்குள் ஒரு கவிஞன் ஒரு கலைஞன்
அன்று தோன்றினான்,
இருக்கும் சுமைகளை சற்றே இறக்கி வைக்க
மீண்டும் பழைய நியாபகம்,
அறிவுரை சொற்கள் மீண்டும் அலைபாய்ந்தன
ஆனால் கடினமான மனது
இன்று ஏனோ கரைந்தது
யாருக்காக, எதற்காக, எங்கே...
கூறலாம் பல சம்பவங்கள்
கல்லாக நடித்த நெஞ்சம்
அழுதது இன்று ஏனோ கொஞ்சம்
அவளுகாகவா, அதற்காகவா ?
யாராக இருந்தாலும் , எதற்காக இருந்தாலும்
அவை எல்லாம் பெண்ணின் வடிவம் கொண்டு தான் இருந்தது
பாசமுள்ள சிநேகிதி, என் மனதை கவர்ந்தாள்
வாழ்கையின் எல்லை வரை பயணம்
செய்யவிரும்பிய அந்த சின்னஞ்சிறு உள்ளம்
தடுத்தவர்கள் பல பேர் இருந்தாலும்
தனக்கு தானே போட்ட முள் வேலிகள் தான் அதிகம்
இதயங்களின் நிரம்புகளை பின்னி பிழிந்தது
வழிந்தோடின செந்நீர் ஓடைகள்
யாருக்கும் தெரியாமல் ஒதுகபட்டது சில நாட்களில்
இவையெல்லாம் மறந்து போயிற்று,
காலங்களின் பதிலுக்கு ஆனால்
நினைவுகளோ புதைக்கப்பட்டிருந்ததே தவிர
அவையாவும் அழிக்கப்படவில்லை
வருங்காலத்தில் ஏதோ ஒரு சின்ன சம்பவம்
பழைய நாட்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுமா
என்று ஆவலுடன் கண்களுக்கும், இதழ்களுக்கும்
பரிமாறிய இதய எதிர்பார்புகளின் அனுபவம்
சுமையான நேரங்களிலும் சுகமாக இருக்கின்றன
கடவுள் நம்பிக்கை இல்லாதவன்
அவனிடம் கேக்க வேண்டிய பல கேள்விகளில் சில
ஏன் பெண்களை படைத்தாய், அது மட்டும் இல்லாமல்
என்னை ஏன் அவர்களால் வீழ செய்தாய்
வீழ்ந்தாலும் மீழ முடியாத காயங்களை
என் இதயத்திற்கு ஏன் எனக்கு தர செய்தாய்
மீழ்ந்தாலும், புது வாழ்கயின்மேல் பற்றில்லாமல் செய்தாய்
எங்கு சென்றாலும் அவள் நியாபகம்
யாரிடமும் பேசினாலும் அவளின் சாயல்கள்
மனிதர்கள் மட்டும் அல்ல, வீசும் காற்று
பாயும் அலைகள், உதிக்கும் சூரியன்,
பொழியும் மழை துளிகள்
இப்படி எங்கு சென்றாலும், இயற்கையின் ஸ்வரூபமாய்
அவள் மட்டும் என் கண்களுக்கு விருந்தாக நிற்கிறாள்
அவளது சிரிப்பை கண் இமைக்காமல் பார்பதும்
அவளது ஆறுதலான பேச்சை கேட்பதும்
இவுலகில் கடினமாய் போன விஷயங்கள்
இருந்தும் அவள் நினைப்பில்
ஏனென்று இப்பிள்ளை மனதிற்கு தெரியாமல்
அவளுக்காக மட்டுமே வீழ்ந்து மாழும்
என் கண்களின் ஓரமாய்
இன்னும் சில கண்ணீர் துளிகள் ஏனோ ?
No comments:
Post a Comment