Friday 28 March 2008

வாழ்ந்துவிட்டேன் உன் வார்த்தைகளில்


அமைதியான மாலை நேரம்
சில்லென்ற தென்றல் வீசும் தருணம்
வந்தது ஒரு மெல்லிய ராகம்
எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்றை
புரிந்தும் புரியாதது போல்
நடிகவேண்டிய சூழ்நிலை
எத்தனை நாட்கள் மூடி வைப்பது
ஏமாற்றத்தின் வாசலை நோக்கி
வாழ்கையில் பாதி தூரம் கடந்து
பின்னர் அது தவறென்று உணர்ந்து
முன்செல்வதா, இல்லை பின்வாங்குவதா
மனகுழபத்தின் நடுவில் திண்டாடிய நிலை
பிரியவும் விருப்பமில்லை
ஏற்கவும் வழியில்லை
சொல்லாத சில விஷயங்கள் சொல்லாமலே
இருந்திருக்க வேண்டிய புராணங்கள்

என்னோடு வாழ விரும்பும் ஒரு ஜீவன்
அவளுக்காகவே வாழ்கின்றேன் நானும்
எது வரை தொடரும் இந்த பந்தம்
விதியின் விளையாட்டுக்கு நான் இங்கு பலி
எத்தனை எமாற்றங்கள, எத்தனை தோல்விகள்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
ஆறுதல் வார்த்தைகள் தேவை இச்சமயம்
பிஞ்சு மனதின் கள்ளமில்லாத ஆசைகள்
யாருக்கு புரியும் மனசுக்குள் இருக்கும் வரை
ஒவொரு நொடியிலும், ஒவொரு சுவாசத்திலும்
உன்னகாக மட்டுமே ஏங்கும் இந்த ஜீவன்
எனக்குள் ஏன் இந்த போராட்டம்
வாழ்விற்கும் சாவிற்கும் நடுவில்
பூக்கும் இந்த காதல் மொட்டுக்கள்
மலராமலே கிள்ளி எறியப்பட வேண்டுமா

எங்கு செல்வேன் உன்னை மறந்து
நீ விரும்பிய சின்ன சின்ன ஆசைகள்
ஒலிக்கிறது இன்னும் என் காதுகளில்
கை கோர்த்து, மார்பில் சாய்ந்து
பகிர்ந்து கொள்ளும் அந்த ஸ்பரிசம்
வேண்டும் என் ஆயுள் வரை
கிடைத்ததோ கற்பனையில் மட்டும்
என்னை பார்க்கும் உன் கண்கள்
உருகியது என் நாடி துடிப்பை
எங்கு மறைபேன் என் மனதை
உன் மடியில் என்னை மறந்தேன்
மறுபடியும் கிடைக்குமோ இந்த பாக்யம்
மடியலாம் இந்த நொடியிலேயே
வாழ்ந்துவிட்டேன் உன் வார்த்தைகளில்

No comments: