கல்லூரி விடுமுறை நேரம்
சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள்
தேர்ந்தெடுக்க பட்ட இடம்
ஒரு மலை பிரதேசம்
சிரியாதாய் தெரிந்தாலும்
மனதை கொள்ளை கொள்ளும் அழகு
படர்ந்திருக்கும் எங்கெங்கும்
அதிசயம் பூக்கும் சொர்க்க வாசல்
கூட்டம் கூட்டமாய் ஆவலுடன் கூடிய
அரும்பிய மீசைகளோடு மாணவர்களும்
புதியதாய் பூத்த பெண்மலர்களும்
அதி காலையில் சில்லென்ற காற்றுடன்
புறப்பட்டனர் கல்லூரியின் முத்துக்கள்
இலக்கை அடையும் வரை கூத்தும் கும்மாளமுமாய்
பேரூந்தில் இருந்த படியே பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்
மெதுவாக அவரவர் கனவுகளுக்குள்
கற்பனைகளை வளர்த்து கொண்டிருந்த வேளை
சில ஜோடிகள் மட்டும் ஒன்று சேர சந்தர்ப்பம் கிடைத்தது
பரிமாறிக்கொள்ள விஷியங்கள் அதிகமாய் இருந்தாலும்
மௌனமே இறுதி வரை வார்த்தைகளை வென்றது
சக்தி இருக்கும் வரை ஆடி பாடிய வானம்பாடிகள்
சற்றே ஓய்வெடுக்க, திரைப்பட பெட்டிகள் ஒல்லிதன
பிடித்த கதாபாத்திரங்களோடு, விரும்பிய திரை படம்
பார்த்தவர்கள் கண்களில் கண்ணீர் துளிகள்
சொந்த வாழ்க்கையை கற்பனையோடு ஒப்பிட்டு பார்க்கையில்
விளைவுகள் விபரீதமாக தெரிகிறது
தலைவன் விரும்பிய தலைவி
காண்பது இருவர் கண்கள் மட்டும் தான்
பேசிகொள்கிறார்கள் இரு மனதோடு மட்டும்
எதிர்பாராத உணர்ச்சிகள்
மெதுவாக பூத்து வருகிறது
தீர்க்கமாக எடுத்த முடிவுகள்
ஒவ்வொன்றாய் உடைய ஆராம்பம்
முடிவில் தலைவனை அழைத்த தலைவி
இது வரை மறுத்திருந்தேன் மறைத்திருந்தேன்
இன்று அது தவறாய் தெரிகிறது என்றாள்
ஏன் இந்த திடீர் மாற்றம்
புலம்பினான் குழப்பத்துடன் தலைவன்
வேண்டாம் என்றாள் ஒதுங்கினேன்
திடீரென்று வேண்டும் என்றாள் விரும்பினேன்
ஆனால் முடிவில் என் செய்வாள் வியக்கவில்லை
காதல் கண்களை மறைத்து
தலைவியின் கூர்மையான கண்களில்
வழிந்தோடும் அந்த உன்னதமான கண்ணீர் துளிகள்
உருக்கியது தலைவனின் நெஞ்சத்தை
எடுத்த முடிவு தலைவியின் விருப்பமில்லை
தலைவனின் நம்பிக்கை என்னும் காதல்
இன்று வேண்டாம் என்றாலும்
என்றொரு நாளாவது விடியல் பிரக்குமென்றும்
உண்மை காதலின் உணர்ச்சிகளை புரிந்து கொள்வாள் என்றும்
நம்பிக்கையோடு இருந்த தலைவனின் தீர்க்க முடிவு
வென்றது அவனின் மென்மையான தலைவியின் மனதை
கரைபார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்
கரைக்க வேண்டாம் அன்பர்களே
வெளிகாட்டினால் போதும் வென்றிடலம் இவர்களை
இளைய தலைமுறையின் எதிர்பார்போ அன்பும் அரவணைப்பும்
இருப்பது சரி என்று அவரது மனதில் பட்டால்
தயங்க மாட்டார்கள் சரித்திரத்தை படைக்கும் இளைஞர்கள்
பிறர்காக வாழும் கலாசாரம் ஒழித்து
தன் சந்ததியினர்களுகாக வாழ ஆரம்பித்து விட்டனர்
தனது வாழ்கையை முடிவு செய்ய
தாமே முன் வருவோம் என்று முடிவு செய்தனர்
பூட்டி வைத்த கூண்டிலிருந்து
பரக்க ஆரம்பித்த அந்த மாணவ மணிகள்
பறந்தனர் அந்த காதல் சின்னமாய்
ஒளிவீசிகொண்டிருகும் காதல் மலையாம் கொடைக்கானலில்
Friday, 4 April 2008
காதல் மலையில் ஒரு காதல் கதை
Posted by Jeevanin Sahaa at Friday, April 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
En nanbane ennoda kangalil irundhu thanni varudhu - Sirichu sirichu...Nandhan karanamnu solluva: eppadiyum adhu enakku theriyum..Mudiyalada saaamy...Endrum kolaiveriyudan un kadhalai kedukkum Super star Sheik Yaseen
Post a Comment