Thursday 15 May 2008

இன்னும் இருக்கிறாய் என் மனதுக்குள் இப்போது....

பிறக்கும் குழந்தைகளின் சிரிப்பு
பார்த்துகொண்டே இருப்பதில் சுகம்
எவ்வித இன்னல்கள் நேரிடினும்
காற்றினுடன் கலந்தோடிவிடும்
காதலின் தூதுவனாய்
புதியதாய் பூத்த பூவரசனாய்
சொல்லி அனுப்பிய செய்திகளை
சிரிப்பாலும் அழுகையாலும்
கொஞ்சம் கொஞ்சமாய் உதுரிவிட
சின்ன சின்னதாய் என் நெஞ்சில்
மின்னல்கள் சில வெட்ட
இழுத்து சென்றது என்னை
என் காதோலுடு, என் காதலியோடு

மறந்திருந்தேன் சில நாட்கள்
அவளது நினைவுகளையும், சிரிப்பையும்
என்ன ஒரு மாற்றம்
அதுவும் சில நாளிகைகளில்
மனிதனின் அறிவிற்கு புலப்படாமல்
அவன் மனதிற்கு மட்டும் சொந்தமான
இந்த காதல் கதை
ஆம் எவருக்கும் கூரபடாத கதை
கூறமுடியாத கதை
கல்லறை பெட்டிகளில் தூங்கும் கதை
அவரவர் மனதினுக்குள்
புதைக்கப்பட்ட கதை

என்று விடியும் இந்த சமுதாய இருட்டு
என்று கிடைக்கும் காதலுக்கு விடுதலை
மனதை மட்டும் மதிக்கும்
மனிதர்கள் எப்போது தோன்றுவார்கள்
பழைய புராண காலங்கள் முதல்
புதிரான இந்த கலிகாலம் வரை
ஏன் இந்த வேற்றுமை உணர்வு
சேர்ந்திருந்தும் தனியே வாழும்
இந்த நாகரீக மிருகங்களுக்குள்
காயப்பட்ட இந்த தலைமுறை
விழித்துவிட்டது ஓர் சரித்திரம் படைக்க
புயலை தவிர்த்து தென்றலினால் மட்டும்
தாகத்தை தவிர்த்து மழையினால் மட்டும்
துரோகங்களை தவிர்த்து அன்பினால் மட்டும்
புதியதாய் ஒரு உலகத்தை
செதுக்கி எடுக்க புறப்பட்டனர்

முரசொலித்துக்கொண்டு நானும் சேர்ந்தேன்
இப்படையின் ஒரு போர்வீரனாய்
எனக்கு துணையாக நீயும் வருவாயென
லட்சியம் ஒரு கண்ணிலும்
காதல் ஒரு கண்ணிலும்
அடிமேல் அடி வைத்து,
உன் வரவை எதிர்பார்த்து
கார்த்திருகேன் காதலியே
நீ விரைவில் வருவாயென

No comments: