Wednesday, 11 April 2007

என் குற்றமா ?

வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி கொண்டிருக்கும் தருனத்தில்,
உதவியென்று வந்தவர்களுக்கு உதவியது என் குற்றமா ?
உதவியவர்களுக்கிடயே சர்ச்சைகள் வந்த போது
அதை தடுக்க நினைத்தது என் குற்றமா ?
இவைகளை புரிந்து கொள்ளாமல் என்னை இழித்து பேசியும்
பாதகம் ஒன்றும் செய்யாமல், விலகி இருந்தது என் குற்றமா ?
இந்த செயலால், ஒதுக்க பட்டவர்களை மேலும் உபசரித்தது என் குற்றமா ?
சுயநலமின்றி பிறர்நலம் கருதி செயல் பட்டது என் குற்றமா ?
இந்த அன்பு பிறரை என் மேல் ஈர்த்தது என் குற்றமா ?
அவரது அன்பு என் மேல் காதலாய் மருவியது என் குற்றமா ?
அவரது காதல் வெரும் மாயை என்று விளக்கியது என் குற்றமா ?
பின்பு அதே காதல் வெரியானது என் குற்றமா ?
அந்த விளைவினால் அவர் எல்லையை மீரியது என் குற்றமா ?
அந்த பிஞ்சு மனதில் அன்பும், காதலும், வெரியும் விஷமித்திருந்த போதிலும்,
சாதரனமாக பழகியது என் குற்றமா ?
தவருகள் செய்வது மனித இயல்பென்று,
திருந்துவதர்க்கு சந்தர்பங்களை அளித்தது என் குற்றமா ?

யாரை பழிப்பது ?

எவரும் கெட்டவரில்லை, நல்லவருமில்லை,
கண்ணோரம் கண்ணீரென்றால் சோகமில்லை ஆனால்
கண்ணீரே கண்களென்றால் என் செய்வது
பாவம் விதி வைத்த தீயில் பொசுங்கிய மனதினாலும்,
விழி இரண்டின் நீரில் மூழ்கிய உயிரினாலும்,
வெரி கொண்ட மனசு, என்னை பழித்து பேசியும்,
பரிதாபம் மட்டுமே என் மனசில் இருப்பது என் குற்றமா ?
பாதகம் செய்யாத மனசு பழிக்கப்பட்டாலும்
வாழ்கையில் உன்மையான பேரானந்தம் அடைவதெப்படி ?
இன்னல்கள் கோடி, அழுது கொண்டிருக்கும் வரை
சந்தோஷங்கள் பல கோடி, சிந்தித்து செயல்படும் வரை !


Sunday, 4 March 2007

வாரம் எத்தனை நாட்கள் ?


என்னடா இந்த Blogspot இயக்குனர் பாலாவின் படங்களை போலவே இருக்கிறதே என்று பல பேர் கேட்டிருந்த போதும், அவரை போலவே சொந்த கதைகள் யாருடையதாய் இருந்தாலும் இப்படித்தான் இருக்குமென்று முகத்தில் மட்டும் சிரிப்பைக்கொண்டு, மேற்கொண்ட கேள்விகளை தவிர்த்துவிடுகிறேன்.


கன்னித்தமிழ் கண்டதொரு திருவாசகம் !
கல்லை கனியாக்கும் எந்தன் ஒரு வாசகம் ! !

இப்படி என் வாசகங்களுக்கு மரியாதை செய்தவர் ஓரிரெண்டு பேர்கள் இருந்தாலும், நிகழும் உண்மை என்ன ?

சந்தோஷத்தை பகிர்ந்தால் இரட்டிப்பாவதும் , துக்கத்தை பகிர்ந்தால் பாதியாக குறைவதும் உண்மைதான் என்று என் மனதை சற்று பிழிய ஆரம்பித்துள்ளேன்.

சரி, விஷயத்திற்கு செல்லும் தருனம் ஆயிற்று.

தலைப்பிற்கு ஏற்றார்போல அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்க்கைச்சக்கிரம் வேகமாக மாறி வருகிரது.

ஐந்து நாட்கள் வேலை, இரு நாட்கள் ஆட்டம் பாட்டம் என்று பொழுதை வீணடிக்கும் மனிதர்களின் நடுவே, வாரத்திற்கு ஒரு நாள் கூடுதலாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கத்துடன், ஏழு நாட்களும் அயராது வேலை செய்து பனம் சேர்க்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், வாழ்கையில் எப்படியாவது ஒரு சீரான நிலையை அடைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, தினந்தோறும் உடல்நலனை கெடுத்து சேர்த்த பணத்தின் மதிப்பெண்ணெவோ, மருத்துவச்செலவும் படுத்த படுக்கையும் தான்.

சாமுராய்கள் அழக்கூடாது என்ற வாசகத்தின் பாதிப்பால், நாள் தோரும் இருவது மணி நேரம் உழைத்து, நடப்பவை யாவும் நமது நலனுக்கே என்று மனம் தளராமல் வாழ்ந்து வருகிரேன்.

பனம் மட்டும் வாழ்கையல்ல என்று நானும் புரிந்து கொண்டேன். நிலையான சுகம் காண மனதை மீண்டும் வழிநடத்த ஆரம்பித்துள்ளேன்.

துறவு வாழ்கையில் இருந்த அமைதியான மன நிலை இன்று சராசரி மனிதனின் வாழ்கையில் இருப்பதில்லை.

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் !
ஆடித்தானே சேர்த்து வைத்த பாவம் யாவும் தீரனும் !!
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஒடும் மானிடா !!!
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா !!!!

துயருக்கு பயந்து வெகு தூரம் ஓடினாலும், தீய சக்திகளை எதிர்க்கும் திறண் நம்முள் வளரும் வரை, இவைகள் நம்மை விரட்டி கொண்டு தான் இருக்கும்.

எனவே சிந்திக்கவும் சாதிக்கவும் வாய்ப்பளித்த இந்த பிறப்பிற்காக நன்றி சொல்லி வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் காட்டனும் என்ற மன உறுதியுடன், சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன் ஆம் நான் மனிதன் என்று வாழ்க்கையின் சரித்திரத்தில் இடம் பிடிக்க ஆயுத்தமாகி விட்டேன்.

Tuesday, 6 February 2007

ஆதிக்கம் செய்த நாட்டில் அடைக்கலம்

பிறந்த நாட்டை விட்டு உயிர் பிழைப்பதர்காக மட்டுமே அயல்நாட்டை அடைய வேண்டும் என்ற அவசர முடிவின் விளைவினால், நம் தாய் நாட்டை ஆதிக்கம் செய்த நாடாக இருந்தாலும் பாதகம் இல்லை என்று ஐக்கிய ராஜியங்களில் ஒன்றான இங்கிலாந்து நாட்டை அடைந்தேன்.முதல் இலக்கை அடைந்துவிட்டாலும் மனம் தவிக்கும் தவிப்பை அமைதி படுத்த வழி ஒன்றும் தெரியாமலும் புரியாமலும், ஒரு வேளை இடைவெளியில்லாமல் வேலை செய்தால் குறைந்த பட்சம், மன குலைச்சலையாவது குறைக்கலாம் என்ற நிணைப்புடன் எனது முதன் முதல் பணியில் ஐக்கியமானேன்.

அயல் நாட்டிற்கு படிப்பதர்காகத்தான் சென்றிருக்கிறேன் என்று பிறர் நிணைத்திருந்தாலும் அதை வெரும் துருப்பு சீட்டாக மட்டுமே பயன் படுத்திக்கொன்டு மேலும் மூன்று பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஏற்பட்ட துயரம் சில மதியற்ற செயல்களால் இருந்திருந்தாலும், மேன்பட்டதோ ஒரு அயல்நாடு, அதுவும் நம் தாய்நாட்டை ஆதிக்கம் செய்த நாடு.

எதை தவிர்த்திருக்கலாம் ?

இது போன்ற் விவாதங்களில் என் மனதை மீண்டும் புகுத்தாமல் நிகழ்ந்தவைகளை நம் நாட்டிற்கு சாதகமாக உபயோகிக்கும் வகையில் சிந்திக்க ஆரம்பித்தேன்.

கிட்டிய யோசனை சரியா என்பதை விட நிச்சயமாக தவரில்லை என்று நினைத்து பணிபுரியும் நான்கு பணிகளிலிருந்து சேமித்த செல்வத்தை நாம் பிறந்த நாடாகிய தமிழ் நாட்டில் சமூக சேவை புரியும் சில நிருவனங்களுக்கு உதவி செய்து அவர்களது நிர்வாகத்தில் ஒரு சிறிய பங்கை ஏற்றேன்.

இந்த நிமிடமும் என் உயிர் இந்த மாமிச பின்டத்தை பிரிந்தாலும் பிறர் நலனுக்காக வாழ்ந்த ஒரு சிறிய ஆத்ம த்ருப்த்தியுடன் எனது ஜீவன் இயற்கையை எய்தும்.