Tuesday, 6 February 2007

ஆதிக்கம் செய்த நாட்டில் அடைக்கலம்

பிறந்த நாட்டை விட்டு உயிர் பிழைப்பதர்காக மட்டுமே அயல்நாட்டை அடைய வேண்டும் என்ற அவசர முடிவின் விளைவினால், நம் தாய் நாட்டை ஆதிக்கம் செய்த நாடாக இருந்தாலும் பாதகம் இல்லை என்று ஐக்கிய ராஜியங்களில் ஒன்றான இங்கிலாந்து நாட்டை அடைந்தேன்.முதல் இலக்கை அடைந்துவிட்டாலும் மனம் தவிக்கும் தவிப்பை அமைதி படுத்த வழி ஒன்றும் தெரியாமலும் புரியாமலும், ஒரு வேளை இடைவெளியில்லாமல் வேலை செய்தால் குறைந்த பட்சம், மன குலைச்சலையாவது குறைக்கலாம் என்ற நிணைப்புடன் எனது முதன் முதல் பணியில் ஐக்கியமானேன்.

அயல் நாட்டிற்கு படிப்பதர்காகத்தான் சென்றிருக்கிறேன் என்று பிறர் நிணைத்திருந்தாலும் அதை வெரும் துருப்பு சீட்டாக மட்டுமே பயன் படுத்திக்கொன்டு மேலும் மூன்று பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஏற்பட்ட துயரம் சில மதியற்ற செயல்களால் இருந்திருந்தாலும், மேன்பட்டதோ ஒரு அயல்நாடு, அதுவும் நம் தாய்நாட்டை ஆதிக்கம் செய்த நாடு.

எதை தவிர்த்திருக்கலாம் ?

இது போன்ற் விவாதங்களில் என் மனதை மீண்டும் புகுத்தாமல் நிகழ்ந்தவைகளை நம் நாட்டிற்கு சாதகமாக உபயோகிக்கும் வகையில் சிந்திக்க ஆரம்பித்தேன்.

கிட்டிய யோசனை சரியா என்பதை விட நிச்சயமாக தவரில்லை என்று நினைத்து பணிபுரியும் நான்கு பணிகளிலிருந்து சேமித்த செல்வத்தை நாம் பிறந்த நாடாகிய தமிழ் நாட்டில் சமூக சேவை புரியும் சில நிருவனங்களுக்கு உதவி செய்து அவர்களது நிர்வாகத்தில் ஒரு சிறிய பங்கை ஏற்றேன்.

இந்த நிமிடமும் என் உயிர் இந்த மாமிச பின்டத்தை பிரிந்தாலும் பிறர் நலனுக்காக வாழ்ந்த ஒரு சிறிய ஆத்ம த்ருப்த்தியுடன் எனது ஜீவன் இயற்கையை எய்தும்.


2 comments:

ஐந்திணை said...

நல்லதுதான் நண்பா!...
இன்னும் கொஞ்சம் குமுறலாம்!

Jeevanin Sahaa said...

நாம் மட்டும் எத்தனை நாட்கள் தான் குமுறுவது !

அய்யா பழி வாங்க வேண்டாம், குறைந்த பட்ஷம் இழிப்பவர்களை எச்செரிக்கலாமல்லவா ?

நான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானால், திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைவரும், திருமணத்திர்க்கு முன்பு கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள்ள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அறியவல்லதொரு சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவேன்.

வாழ்க மனித நேயம் ! ! !

இப்படிக்கு,

உங்கள் அன்புள்ள,
ஜீவனின் சஹா....